Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
சம்மாந்துறைப் பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்துவது சம்பந்தமான மகஜரை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறைத் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி, புதன்கிழமை (14) கையளித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின்போது, மேற்படி பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்த வேண்டிய அவசியம் பற்றி எடுத்துக் கூறியதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான பிரதான அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி தெரிவித்தார்.
புதிய உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கும் தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களை நகர சபையாகத் தரம் உயர்த்துவதற்குமான சிபாரிசு செய்வதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 12 பேரடங்கிய குழுவை நியமித்துள்ளது. இக்குழுவிடம் சம்மாந்துறை பிரதேச சபையை நகர சபையாக தரம் உயர்த்துவது சம்பந்தமான மகஜரை ஒப்படைத்து, அக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் நகர சபையாக தரம் உயர்த்துவதற்குமான நடவடிக்கையை மேற்கொள்வதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '136 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட சம்மாந்துறைப் பிரதேசமானது 85,000 சனத்தொகையைக் கொண்டதாகும். இங்கு 43 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இப்பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் 51 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன.
இப்பிரதேச சபையை தரம் உயர்த்துவது தொடர்பான மகஜரை ஏற்கெனவே இருந்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளித்திருந்தோம். அவரும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகத்; தெரிவித்திருந்தார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 minute ago
42 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
50 minute ago
55 minute ago