2025 மே 02, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 மார்ச் 20 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் புதிய கல்வியாண்டுக்கான மாணவிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த, ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள மாணவிகள் விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்படுகிறது.

இது குறித்து கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி மேலும் தெரிவிக்கையில்,

“இக்கல்லூரியில் மௌலவியா, அல் ஆலிம் மற்றும் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைகளுக்கு மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி  மௌலவியாக்களாக, தாயியாக்களாக வெளியேறுகின்றனர்.

“கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜீ.சி.ஈ. உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய எமது மாணவிகள் அனைவரும் எல்லா பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றனர்.

“அத்துடன், அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியடைந்துள்ளனர். எமது கல்லுரியிலிருந்து இதுவரை இரண்டு பிரிவு மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

இக்கல்லுரியில் சேர விரும்பும் மாணவிகள் கல்லுரி அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர்  விண்ணப்பிக்குமாறு கேட்கப்படுகின்றனர். தெரிவுக்கான நேர்முகப்பரிட்சை, ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி காலை நடைபெறும்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X