2025 மே 01, வியாழக்கிழமை

சாய்ந்தமருது பிரதேச செயலாளராக ஆஷிக் கடமையேற்பு

Editorial   / 2021 மார்ச் 08 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, சர்ஜுன் லாபீர், சகா, நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.ஆஷிக், தனது கடமைகளை இன்று (08) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் புதிய பிரதேச செயலாளருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, நிந்தவூர் பிரதேச செயலாளர் எம்.எம்.அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.சாபீர் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த எம்.எம்.ஆஷிக், சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையில், அரச சேவைகள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால், சாய்ந்தமருது பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கல்முனை, நற்பிட்டிமுனையை சேர்ந்த இவர், உஹன பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .