Princiya Dixci / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கிடையிலான கலந்துரையாடல், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று (27) மாலை நடைபெற்றது.
வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், வைத்தியசாலையின் குறை, நிறைகள், தேவைகள் வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்களுக்கு நடைபெறும் அநீதிகள் தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் எம்.ஐ.சதாத் விளக்கமளித்தார்.
இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்து, பிராந்திய மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வைத்தியசாலையாக சாய்ந்தமருது வைத்தியசாலையை மாற்றியமைக்க உறுதியளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா தனது உரையில் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ..எம். அஸீஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் றஜாப், சிரேஷ்ட வைத்திய அதிகாரி சனூஸ் காரியப்பர், தேசிய காங்கிரஸ் பிரமுகர்கள், சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
4 minute ago
22 minute ago
34 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
22 minute ago
34 minute ago
46 minute ago