2025 மே 05, திங்கட்கிழமை

சிகிச்சை நிலையத்துக்கு கட்டில்கள் வழங்கல்

Princiya Dixci   / 2021 மே 24 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கான 20 கட்டில்கள், இன்று (24) வழங்கிவைக்கப்பட்டன.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டபிள்யூ.டி.வீரசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு, கட்டில்களை வழங்கி வைத்தார்.

இதில் பொதுஜன பெரமுனவின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் இணைப்புச் செயலாளருமான ஏ.எம். நிஹால், கல்முனை அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா, ஆயுர்வேத தள வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் பீ.எம். றதீஸ் மற்றும் ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்காமல் இம்மாவட்டத்திலேயே சிகிச்சை வழங்குவதற்கு அம்பாறை மாவட்டத்தில் புதிதாக பல கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக, வீரசிங்க எம்.பி இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X