2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சிரேஷ்ட பிரஜைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும்

Editorial   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள முதியோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக சமூகம் தரும்போது ,  சேவை நிலையங்களில் முன்னுரிமை வழங்கி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு, சாய்ந்தமருது ஓய்வுதியர் சங்கம் கேட்டுள்ளது.

தமது வாழ்நாளில் பலவிதமான திணைக்களங்களிலும் பாடசாலைகளிலும் சேவையாற்றி தற்போது வயதாகி ஓய்வான நிலையில் தமக்கேற்படும் தேவைகளை புர்த்தி செய்ய அவர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், அரச திணைக்களங்கள், பிரதேச செயலகங்கள், தபாலகம், வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையங்கள், நூலகம், இலங்கை மின்சார சபை, வங்கி மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அகியவற்றுக்கு வருகை தரும்  போது, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதால் பலவிதமான கஷ்டங்களை அவர்கள் எதிர்நோக்கக வேண்டியுள்ளது.

இதனால் முதியோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் தேவைகளை உரிய நேரத்துக்கு நிறைவேற்றிக் கொடுக்க திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், சில சேவை நிலையங்களில் சிரேஷ்ட பிரஜைகளுக்கென தனியான பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஓய்வுதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X