ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜூலை 18 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில், வழமையாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளபோதிலும் வறட்சி, காலநிலை மாற்றம் காரணமாக இம்முறை 26 ஆயிரம் ஏக்கர் நெற்காணிகளுக்கு மாத்திரமே நெற்செய்கைக்கான அனுமதியினை அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் வழங்கியிருந்தது.
எனினும், அம்பாறை மாவட்டத்தில் பிந்திக் கிடைத்த மழை வீழ்ச்சியின் பொருட்டு இத்தொகையில் அதிகரிப்புச் செய்யப்பட்டது. இவ்வாறு, பின்னர் இரண்டாம் கட்டத்தின்போது செய்கை பண்ணப்பட்ட நெற்காணிகளின் அறுவடை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இடம்பெறவுள்ளதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.
முறையான நீர்ப்பாசன வசதி இன்மை, காலநிலை மாற்றம் காரணமாக எரி பந்த நோய் மற்றும் களைகளை கட்டுப்படுத்த முடியாது போனமை, நெற்பயிர் போதிய வளர்ச்சியின்மை போன்ற காரணங்களினால் குறைவான விளைச்சலைப் பெற்றுவருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெற்செய்கைக்கான உரம், இராசயானப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்புக் காரணமாகவும், சந்தையில் நெல்லுக்கான விலை குறைவடைந்துள்ளதாலும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்று, பிராந்திய நீர்ப்பாசனப் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று, இலுக்குச்சேனை, தீகவாபி, வீரையடி ஆகிய நீர்ப்பாசனப் பிரிவுகளிலும் மொத்தம் 9 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை பண்ணப்பட்டுள்ளதாக பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026