2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்கமாறு கோரி போராட்டம்

Editorial   / 2018 ஜூலை 02 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, ஒலுவில், அஷ்ரப் நகர் பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்கமாறு கோரி, காணி உரிமையாளர்கள், இன்று (02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணிகளை இழந்த பொதுமக்கள், அஷ்ரப் நகர் பிரதான வீதியில் கவனயீர்ப்பை ஆரம்பித்து, சுலோபங்களை ஏந்திய வண்ணம் இராணுவ முகாம் வரை பேரணியாகவும் சென்றனர்.

“நல்லாட்சி அரசே அபகரிக்கப்பட்ட எங்களது காணியை மீட்டுத் தா”, “காடு வளர்க்க எங்களது காணியா உங்களுக்கு?”, “அரசே நாம் பயிரிடுவோம்; நாட்டைக் கட்டியெழுப்புவோம்”, “நாங்கள் படும் வேதனைக்குத் தீர்வு கொடு” போன்ற சுலோபங்களை ஏந்திய வண்ணம் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

1952ஆம் ஆண்டுக்கு முன்னர் தங்களது மூதாதையர்களால் காடுவெட்டி வாழ்ந்து வந்த காணிகளுக்கு, 1980ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தால் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.எல். மிஸ்பா, இக்காணிகள் அபகரிக்கப்பட்டு, தற்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வேறு நபர்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

சுமார் 63 ஏக்கர் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதால், அதில் வசித்து வந்த 59 குடும்பங்கள், கடந்த 05 வருடங்களாக வாழ்வதற்கு இடமில்லாமல் மிகவும் அல்லல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யானை வேலி நிர்மாணிப்பது என்ற போர்வையில் கற்கள் அகற்றப்பட்டு, தங்களது காணிகள். வன இலாகா திணைக்களத்தால் தற்போது பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகத் தாம் அறிவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இராணுவ முகாமை அகற்றி, காணிகளை மீள வழங்க வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில், கவனயீர்ப்பு போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X