2025 மே 01, வியாழக்கிழமை

செயற்குழு அங்குரார்ப்பணம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் அம்பாறை மாவட்ட செயற்குழு, அட்டாளைச்சேனையில் நேற்று (21)  அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இதன்போது, அம்பாறை மாவட்டச் செயற்குழுவின் செயலாளராக எஸ்.ஜே.தேவானந்த், உதவிச் செயலாளராக என்.சாமில், மாவட்ட ஊடகச் செயலாளராக ஏ.புஆத், பிரதி ஊடகச் செயலாளராக எம்.எப்.பர்ஷாத் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டதுடன், வலய மற்றும் பிரதேச இணைப்பாளர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். 

தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாரக் தலைமையில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.

இந்த நிகழ்வில் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வீ.பற்குணன்,  அக்கரைப்பற்று மாநகர சபையின் செயலாளர் ஹபிபுர் ரகுமான், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.அப்துல் ரஹீம், அக்கரைப்பற்று மற்றும் இறக்காம பிரதேச சபைகளின்  செயலாளரான இர்பான், சங்கத்தின் உதவிச் செயலாளர் பைஸ், சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜாஹிதா ஜலால்டீன், சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் நவநீதன், காத்தான்குடி இணைப்பாளர் சாகிர் உட்பட மீயுயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .