Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ் பயிரிடப்பட்ட 2020ஆம் ஆண்டின் சிறுபோக நிலக்கடலை அறுவடை விழா, அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் வழிகாட்டலின் கீழ், இன்று (12) நடைபெற்றது.
அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி வே.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அறுவடை விழா நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அஹமட் சனீர், விசேட அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாசீக் கலந்துகொண்டார்.
அத்துடன், விவசாயத் திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிகார், ஆலிம்நகர் விவசாய விரிவாக்கல் பிரிவின் பொறுப்பதிகாரி பிர்னாஸ் ஹரிஸ், பாரி நிப்ராஸ் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மகாவலி கமத்தொழில் நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி அமைச்சு, விவசாயத் திணைக்களத்தால் இறக்குமதி செய்யப்படும் 16 பயிர்களை, உள்நாட்டில் உற்பத்தி செய்வதை விரைவாக ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், நிலக்கடலை விதைகளையும் நிதியுதவிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றது.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று மேற்கு விவசாய விரிவாக்கல் காரியாலயத்தின் வழிகாட்டல், தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனை, பங்களிப்பு ஆகியவற்றுடன் பயிரிடப்பட்ட நிலக்கடலை அறுவடை நிகழ்வை அதிதிகள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025