2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சாய்ந்தமருது வைத்தியசாலையில் முறிவுதறிவு சிகிச்சைப் பிரிவு

Suganthini Ratnam   / 2017 மே 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷால் காசீம், இந்நிலையில் சாய்ந்தமருது வைத்தியசாலைக் கட்டடத்தொகுதியில்; சகல வசதிகளையும் கொண்டதாக  முறிவுதறிவு வைத்திய விசேட பிரிவு ஆரம்பிக்கப்படும்  எனவும் கூறினார்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி மற்றும் சிகிச்சை பிரிவைப் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு, அவ்வைத்தியசாலையில் இன்று  நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

தற்போது சாய்ந்தமருது வைத்தியசாலையில் எந்தவொரு நோயாளர்களும்; இல்லாமல் வார்ட்டுகள் மூடிக் காணப்படுகின்றன. எனவே, அந்த வைத்தியசாலையை  முறிவுதறிவு சிகிச்சைக்குரிய வைத்தியசாலையாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அக்கட்டடத்தொகுதியில் இரண்டு அதிநவீன சத்திர சிகிச்சைக் கூடங்களும் ஓர் எக்ஸ்ரே பிரிவும் உடனடியாக அமைக்கப்படும் என்பதுடன், முறிவுதறிவு சிகிச்சைக்கான அதிநவீன உபகரண வசதியும் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.  

இவ்வாறிருக்க, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலையில்  சீ.ரி ஸ்கான் வசதியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மார்புச் சிகிச்சைக்கான விசேட பிரிவும் ஏற்படுத்தப்படும்.

மேலும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையையும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையையும் மையப்படுத்தி ஒரு பிராந்திய பொது வைத்தியசாலையை உருவாக்குவதற்கு தான்  திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .