2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன், வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம் 02இல் 08 வயதுடைய சிறுவனொருவன், ஊஞ்சலுக்காக போட்ட சணல் கயிற்றில் இறுகி நேற்று வெள்ளிக்கிழமை (04) காலை பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சிறுவன், சணல் கயிறு ஒன்றினால் வீட்டுக்கு அருகில் இருந்த மரமொன்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது, தவறுதலாக கயிறு சிறுவனின் கழுத்தை இறுக்கியமையே இவ் உயிரிழப்புக்கு காரணம் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

சிறுவனின் தாய்,  வீட்டினுள் மதிய சமையல் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும் பின்னர், உணவு வழங்குவதற்காக வெளியில் வந்து பார்த்தபோதே இவ்வாறு நடைபெற்றுள்ளதை அவதானித்துள்ளதாகவும், அயலவர்களின் உதவியோடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம், மருத்துவ பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • susila Wednesday, 09 December 2015 12:57 PM

    it sooooo sad

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .