2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய 5 ஏக்கர் காணி ஒதுக்கீடு

Princiya Dixci   / 2021 மார்ச் 11 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு, அம்பாறை - இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட வாங்காமம் பகுதியில் 05 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, இறக்காமம் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.ரி. ஜெமீல் காரியப்பர், இன்று (13) தெரிவித்தார்.

இக்காணி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு இறக்காமம் பிரதேச சபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த இடத்தை சுகாதாரப் பகுதியினர், பிரதேச செயலக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை எதிர்பார்த்து இருப்பதாகவும், அனுமதி கிடைத்ததும் தெரிவுசெய்யப்பட்டுள்ள இடத்தில் கொவிட்-19  ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .