Editorial / 2021 நவம்பர் 04 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் அதிரடியாக டெங்கு களப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில், காரைதீவு அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் நேற்று முன்தினம் (03) இப்பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்புப் பிரிவினர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து 918 வீடுகளில் டெங்கு களப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 13 நபர்களுக்கு சட்ட நடவடிக்கையும் 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago