2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 9 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Suganthini Ratnam   / 2017 ஜூன் 20 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 9 பேருக்கு, ஒரு மாதகாலத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என, அப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.

வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் தொடர்ச்சியாக  மிக மோசமான முறையில் பகடிவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தமக்குத் தகவல் கிடைத்தது.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நிலையில், மேற்படி 9 மாணவர்களுக்கும் திங்கட்கிழமை (19) முதல் எதிர்வரும் ஜுலை 18ஆம் திகதிவரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.  

இவர்களின் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சட்டதிட்டத்துக்கமைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களுக்கான விடுதி வசதி  மற்றும் மஹாபொலக் கொடுப்பனவு இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .