Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2019 பெப்ரவரி 28 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவுகளில் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமையவுள்ள, தெரிவு செய்யப்பட்ட 13 வீதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (27) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பெற்றோலிய வளத்துறை பிரதி அமைச்சர் அனோமா கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்து வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களுக்கான இணைப்பாளர் வி.வினோகாந்தின் வேண்டுகோளுக்கமைய, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே மற்றும் பெற்றோலிய வளத்துறை பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோர் குறித்த வீதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குச் சென்ற பிரதி அமைச்சருக்கும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ். உதயகுமார் மற்றும் அமைச்சின் இணைப்பாளர் வி.வினோகாந்த் உள்ளிட்டவர்களும் குறித்த வீதிகளுக்கான அடிக்கல்லை பிரதி அமைச்சரும் மக்களுமாக இணைந்து நாட்டி வைத்தனர்.
மேலும் இதனூடாக நீண்ட காலமாக போக்குவரத்துக்கு பொருத்தமற்றிருந்த வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக மாற்றம் பெறவுள்ள நிலையில், இதேவேளை பொதுமக்களுடன் சகஜமாக கலந்துரையாடிய பிரதி அமைச்சர் எதிர்வரும் காலங்களிலும் தமிழ் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெறும் என உறுதியளித்தார்.
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago