2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தெஹியத்தக்கண்டியில் 179 பேருக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 மே 05 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் தெஹியத்தக்கண்டி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில், இவ்வாரம் 179 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, அப்பிரதேசம் மிக அவதானத்துக்குரிய பிரதேசமாக காணப்படுவதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இன்று (05) தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு, தெஹியத்தக்கண்டி, உகன, திருகோணமலை, கிண்ணியா மற்றும் உப்புவெளி ஆகிய 07 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் மிகவும் அவதானத்திற்குரிய பிரதேசமாக இவ்வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,510 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 804 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,154 பேரும், திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,622 பேரும் அடங்கலாக கிழக்கு மாகாணத்தில் 5,090 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் 13 பேரும், அம்பாறை - உகன பிரதேசத்தில் ஒருவருமாக  கொரோனாத் தொற்று அலையில் 14 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் இதுவரையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 40 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனத் தொற்றின் மூன்றாது அலை மிக வேகமாக பரவிவருவதால் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்குமாறும் அத்தியவசிய தேவையின்றி வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாமெனவும், எனைய மாவட்டங்களிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் சம்மந்தப்பட்ட சுகாதார வைத்தியதிகாரியடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X