Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரிக்கு 2018/2020ஆம் கல்வியாண்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள புரிய பயிலுனர்களுக்கான பதிவு, ஒக்டோபர் 03ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.
இம்மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வாரகால திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
ஆரம்பக் கற்கை நெறிக்கு 160 பயிலுனர்களும், கணிதம் 50 பயிலுனர்களும், இஸ்லாம் 40 பயிலுனர்களும், உடற்கல்வி 40 பயிலுனர்களும், விஞ்ஞானம் 60 பயிலுனர்களும், விசேட கல்வி 40 பயிலுனர்கள் அனுமதிக்கப்படடுள்ளதாகவும், குறிப்பிட்டார்.
தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கான கடிதங்கள், பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கோரப்பட்டுள்ள ஆவணங்களுடன் சமுகம் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.
2016 மற்றும் 2017ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, கடந்த வருடங்களை விட இம்முறை கூடுதலான புதிய பயிலுனர் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக, பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.
42 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago