2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா

தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர், உயர் பீட உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்திருந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்தும் நீங்கிக்கொள்ளும் வகையிலான இராஜினாமாக் கடிதத்தை, கட்சியின் தலைவர் ஏ.எல்.அதாஉல்லாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு  விளக்கமளிக்கும் கூட்டம், அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள அவரது பணிமனை வளாகத்தில் நேற்று (20) இரவு இடம்பெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

புதன்கிழமை (20) முதல், தேசிய காங்கிரஸ் கட்சியின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்கையிலிருந்தும் தான் விலகிக் கொள்வதாகவும் இது விடயமான இராஜினாமாக் கடிதத்தில், கட்சியின் பேரில் தனக்கு ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்தி, தலைமைத்துவத்தின் தவறான போக்குகள் பற்றிய 19 பக்கங்களைக் கொண்ட கடிதத்தை, அக்கட்சியின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.    

இதேவேளை, தனது அரசியல் பயணம் தற்போது சுதந்திரமாகச் செல்லவுள்ளதுடன், வரும் காலங்களில் தனது ஆதரவாளர்களினதும் ஊர் முக்கயஸ்தர்களுடனும் கலந்துரையாடி, ஒரு தீர்க்கமான அரசியல் பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .