2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணத்தை நிறுத்துமாறு கோரிக்கை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனையைடுத்துள்ள பெரியநீலாவணைக் கிராமத்தில் பொதுமக்கள் செறிந்துவாழும் குடிமனைகள் அமைந்துள்ள பிரதேசத்தில், மக்களின் விருப்புக்கு மாறாக நிர்மாணிக்கப்பட்டுவரும் தனியார் தொலைத்தொடர்பு கோபுரப்பணியை உடனடியாக நிறுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடக்கம் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் வரை மகஜர்களைக் கையளித்துள்ளனர்.

எதிர்காலத்தில் தமது குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் அனைவரும் உடல், உள ரீதியாக பாதிக்கப்படலாம் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

எங்களிடம் எவ்வித ஒப்புதலும் இல்லாமல் இதனை அமைக்க அனுமதி கொடுத்தது யார் எனக் கேள்வியெழுப்பும் மக்கள், இதனை உடனடியாக நிறுத்தவேண்டுமென கோருகிறார்கள்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் த.கலையரசன், மாநகரசபை உறுப்பினர் ராஜன் ஆகியோர் அங்கு இன்று (15) விஜயம் செய்யவிருப்பதாகத் தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .