2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தொல்பொருள்களை வைத்திருந்த இளைஞன் கைது

Editorial   / 2021 நவம்பர் 15 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

பண்டையகால தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருள்களை தம்வசம் வைத்திருந்த இளைஞனை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, வெள்ளிக்கிழமை (12) மாலை அக்கரைப்பற்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.பகீரதன் தலைமையில் சென்ற பொலிஸார், மேற்படி இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தாண்டியடிப் பகுதியை சேர்ந்தவர் எனவும் 19 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் அடங்கிய பொருள்கள் பல மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .