2025 மே 01, வியாழக்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் தீ

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஓலுவில், அஷ்ரப் நகரிலுள்ள  திண்மக்கழிவு முகாமைத்துவ நிலைய வளாகத்தில் புதன்கிழமை (26) மாலை  திடீரென்று தீ பரவியது.

அங்கு  பாரிய புகை மண்டலத்துடன் தீ பரவியுள்ளது.

அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்பு பிரிவின் உதவியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் தெரிவத்தார்.

இந்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பராமரிப்பின் கீழுள்ளது.  
இத்திண்மக்கழிவு நிலையத்தில் வேண்டுமென்றே தீ மூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .