Princiya Dixci / 2017 மே 06 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றில் பொது மக்கள் குடியிருக்கும் பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்பட்ட திண்மக் கழிவுகளைக் கொட்டியதைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை (06) ஒலுவில் பிரதேச பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒலுவில் 4ஆம் பிரிவிலுள்ள தனியார் ஒருக்குச் சொந்தமான காணியில், கடந்த இரு நாட்களாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதை அறிந்த மக்கள், இன்று அவ்விடத்துக்கு விரைந்து குப்பைகளை அகற்றுமாறு கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் மற்றும் சுகாதார பகுதியினர் ஆகியோர் அவ்விடத்துக்கு வருகை தந்திருந்தனர்.
குப்பை கொட்டப்பட்ட பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் சுகாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவ்விடத்துக்கு விரைந்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.எம். பாயிஸிடம் வினவிய போது, கல்முனை மாநகர சபைக்கு திண்மக் கழிவுகளை சேகரிப்பதற்கு ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் கல்முனை மாநகர சபைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் இப் பிரதேசத்தில் கழிவுகளை கொட்டியிருப்பது சட்டவிரோதமானதெனவும் இதனை இவ் விடத்தில் இருந்து உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
35 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
25 Jan 2026
25 Jan 2026