2025 ஜூலை 14, திங்கட்கிழமை

திருட்டு மின்சாரம் பெற்ற ஐவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் ஐவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் புலனாய்வுப் பிரிவினரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது அட்டாளைச்சேனை அஷ்ரப் நகரைச் சேர்ந்த ஒருவர், அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு வீதியைச் சேர்ந்த ஒருவர், ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதி மின்கம்பிகளில் கம்பி கொளுவி வீடுகளுக்கான மின்சாரத்தை சட்டவிரோதமாகப்பெற்ற குற்றத்துக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து வயர் மற்றும் மின்குழிழ் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .