Suganthini Ratnam / 2017 மே 04 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறையில்; அவசரத் திருத்த வேலை காரணமாக 3 நாட்களுக்கு மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபையின் அம்பாறைப் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அக்கரைப்பற்றில் நாளை 5ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.
தீகவாபி, இறக்காமம், அம்பாறை, பாலமுகாம், உதயகிரிய, அக்கரைப்பற்று, இசங்கேணிசீமை ஆகிய பகுதிகளில்; நாளை மறுதினம் 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும். கல்முனையில் சாஹிராக் கல்லூரி வீதி, மாலிஹா வீதி, ஒறபிபாஷா வீதி, புதிய வீதி ஆகியவற்றில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.
இசங்கேணிசீமையில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை 8.30 மணி முதல்; மாலை 5 மணிவரையும் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரையும் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
25 Jan 2026
25 Jan 2026