Editorial / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
நத்தார் மற்றும் புது வருட பண்டியைகளை முன்னிட்டு, அத்தியவசியப் பொருள்களின் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள், பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால், திடீர் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி, இன்று (15) தெரிவித்தார்.
அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் நவம்பர் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட 72 வழக்குகளுக்கு நீதிமன்றங்களால் 03 இலட்சத்தி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை ஆகிய நீதிமன்றங்களில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்தல், நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருள்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான பொருள்கள் மற்றும் தரமற்ற பொருள்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றுதல், மின் உபகரணங்களுக்கான கட்டுறுதிக் காலத்தை வழங்காமை உள்ளிட்ட போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கெதிராகவே நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
27 minute ago
32 minute ago
41 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
41 minute ago
55 minute ago