Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
தாம் காலாகாலமாக வாழ்ந்துவந்த காணியை மீட்டுத்தாருங்கள் என பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம மக்கள் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அம்மக்கள், 906ஆவது நாளாக இன்றும் (14) போராட்டக்கூடத்தில் குழுமியிருந்தவேளையில், அங்கு சென்ற காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த போராட்டக் குழுவின் தலைவி றங்கத்தனா, தமது போராட்டம் இவ்வாறு 900 நாட்களையும் தாண்டி இழுத்தடிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் இன்னுமோர் அந்நியசக்தி புகுந்து குழப்பத்தலைப்பட்டுள்ளதையும் விளக்கமாகக் கூறினார்.
வெகுவிரைவில் பொத்துவில் பிரதேசசெயலாளரிடம் பேரணியொன்றை நடத்திச்சென்று, இறுதி மகஜரைக் கையளித்து அந்த இடத்திலேயே உயிரை விடவுள்ளோம் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கருத்துரைத்த தவிசாளர் ஜெயசிறில், “தமிழர் போராட்டங்கள் இவ்வாறு இழுத்தடிக்கப்படுவது ஒன்றும் இந்த நாட்டில் புதினமல்ல. ஆனால், இறுதிவரை நீங்கள் இங்கிருந்து போராடுவதைப் பாராட்டுகிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை.
“எனவே, மனதை தளரவிடாமல் போராடுங்கள். நாம் பிறந்த மண்ணில் அந்நியருக்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. உங்கள் பேரணிக்கு உதவுவேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago