2025 மே 15, வியாழக்கிழமை

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கண்காட்சி

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு, தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை, கிராமிய பொருளாதார அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பவற்றோடு நாவிதன்வெளி பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்தஉற்பத்தி மற்றும் வர்த்தக, சந்தைக் கலை கண்காட்சி, இன்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், அம்பாறை மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்யராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கண்காட்சி கூடங்களைத்  திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில், விசேட அதிதியாக சிறுகைத்தொழில் அபிவிருத்தி பிரிவு உதவிப் பணிப்பாளர். கே.ஜி எஸ்.கே மந்திலகே,  பிரதேச உதவிச் செயலாளர் என். நவநீதராசா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரிம்ஸான், பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .