Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 நவம்பர் 01 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனை - பெரியநீலாவணை முஸ்லிம் வித்தியாலய வீதியில் வசித்து வந்த சுலைமான் லெப்பை சராப்கான் (வயது 21) எனும் இளைஞன், மத்திய முகாம் பிரதேசத்தில் வாய்க்கால் நீரில் நேற்று (31) மாலை குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.
இளைஞன், தனது நண்பர்களுடன் மத்திய முகாம் பிரதேசத்திலுள்ள வாய்க்காலில் நீராடச் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நீருக்குள் சென்றவர் திடீரென நீரில் மூழ்கியதை அவதானித்த நண்பர்கள், அயலவர்களின் உதவியுடன் மீட்டெடுத்து, மத்தி முகாம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், இளைஞனுடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.
ஜனாசா பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஆதாரவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரனைகளை மத்திய முகாம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரணமடைந்த இளைஞன், மிகச் சிறந்த ஒரு கிரிக்கெட் வீரர் ஆவார். மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக்கழக கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் ஆவார்.
இவர், அல் -மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago