Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
வீடுகளில் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருள்களைக் கொண்டு, நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
ஆயுர்வேத முறையில் நோய் எதிர்ப்புச் சக்திகளை அதிகரித்து கொடிய தொற்று நோய்களில் இருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு, அட்டாளைச்சேனை ஊடக இல்லத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “வீட்டுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் வசம்பு, பெருங்காயம் போன்றவற்றை பெரிதும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவற்றை நாம் பயன்படுத்தும் நுழைவாயில்களில் கட்டித் தொங்க வைப்பதன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
“அதுமாத்திரமல்லாமல், பெருங்காயம், வசம்பு போன்றவற்றை பட்டி ஒன்றில் தயார் செய்து அதனை தனது கைகளில் கட்டிக் கொள்ள முடியும். இவற்றை நாம் உடல்களில் கட்டியிருக்கும் காலப்பகுதிகளில் நோய்த் தொற்றிலிருந்து எம்மை நாம் பெரிதும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
“இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலை நிறைவடையும் வரையிலாவது எமது வீடுகளில் காலை மாலை வேளைகளில் வேப்பிலை, வேப்பம் பட்டை, மர மஞ்சள் போன்றவற்றை புகையாக்கி அதனை வீடுகளில் பிடித்து நோய்க் கிருமிகளை அழித்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
“இதுதவிர, எம்மால் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய கொத்தமல்லி, இஞ்சி, மிளகு, மஞ்சள், வசம்பு, மரமஞ்சள், துளசி இலை போன்றவற்றை நன்கு அவித்து அவற்றை சாறாக்கி காலை, மாலை வேளைகளில் பருகிக் கொள்ள முடியும்.
“அதேவேளை, நாம் ஒவ்வொரு தினமும் அதிமான தடவைகள் வெந்நீரை பருகிக் கொள்ள வேண்டும். வெந்நீர் பருவதை நாம் வழக்கமாகிக் கொண்டால், பல்வேறான நோய்களில் இருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். வெந்நீருடன் தேசிக்காய் இலை, துளசி இலை போன்றவற்றை ஆவியாக பிடிக்க முடியும்.
“கருஞ்சீரகத்துடன் போதியளவு தேனைக் கலந்து அவற்றையும் நாம் உண்ண முடியும். பல்வேறான நோய்களுக்கான நிவாரணியாக இவற்றை நாம் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வருவது இங்கே குறிப்பிட்டுக் கூறக் கூடியதாக உள்ளது.
“தேசிக்காய் பானம் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாகக் கொண்டுள்ளதால் அப்பானத்தை நாம் தினமும் பருகிக் கொள்ள முடியும். இதுபோன்று எமது வீடுகளில் உள்ள பொருள்களைக் கொண்டு நாம் எமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
“நோய்த் தொற்றுகளில் இருந்தும் இவ்வாறான அசாதாரண சூழ்நிலையில் இருந்தும் மக்களைப் பாதுகாக்கும் வகையில், இப்பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய வைத்தியவர்களுடன் இணைந்து, நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராச்சி வைத்தியசாலை ஆயுர்வேத வைத்தியத்துறை பணிப்பாளருக்கு முன்மொழிவொன்றைத் தயார் செய்து அனுப்பி வைத்துள்ளது” என்றார்.
40 minute ago
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago
3 hours ago