2025 மே 01, வியாழக்கிழமை

பணிப்பகிஷ்கரிப்பால் நோயாளர்கள் அவதி

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

சைட்டத்துக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக நோயாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

சைட்டம் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசுடமையாக்கு எனும் கோரிக்கையை முன்வைத்து அம்பாறை மாவட்டத்திலும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்,  இன்று(05) ஈடுபட்டனர்.

வைத்தியர்களின் இப்பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து  வைத்தியசாலைகளுக்கும் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை,  அவசரச்சிகிச்சைப் பிரிவு மாத்திரம் செயற்பட்ட நிலையில்,  ஏனைய வைத்திய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததை காண முடிந்தது.

இதனால், தூர பிரதேசங்களில் இருந்து வருகைத் தந்த சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கர்ப்பிணிகள் என பலரும் பாதிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது

“இவ்வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றது என குறிப்பிட்ட நோயாளிகள், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று   கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .