Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ், அம்பாறை மாவட்டத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில், 2018இன் இரண்டாம் அரையாண்டில், சுமார் 20 வகையான பயிற்சிநெறிகளைத் தொடர்வதற்கான விண்ணப்பங்களை, நிந்தவூரிலுள்ள மாவட்ட அலுவலகம் கோரியுள்ளது.
தமிழ் மொழிமூலத்தில் இயங்கும் 9 பயிற்சி நிலையங்களில், தேசியத் தொழிற்றகைமை (என்.வி.கியூ) அடிப்படையில், இக்கற்கைநெறிகள் நடத்தப்படவுள்ளன.
நிந்தவூர் மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையம், சம்மாந்துறை மத்திய முகாம், அக்கரைப்பற்று, பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோவில், சாய்ந்தமருது, காரைதீவு தொழிற்பயிற்சி நிலையங்களிலும், எதிர்வரும் ஜூலை மாதம் முதல், 6 மாதக் கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்படி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், உதவிக் கணிய அளவையியலாளர், கணினி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர், மோட்டார் சைக்கிள் திருத்துநர், மின்னியலாளர், நீர்க்குழாய் பொருத்துநர், உருக்கி ஒட்டுநர், மரக் கைவினைஞர், தையல், அதிவேக தையல் இயந்திர இயக்குநர், விடுதி அலங்கரிப்பாளர், உணவு பரிமாறுநர், செயலாண்மைப் பயிற்சி, ஆடைத் தொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், அலுமினியப் பொருத்துநர், பேக்கரர், எலக்ரிக் மோட்ாடர் வைண்டர், நிர்மாணக் கைவினைஞர் போன்ற முழுநேரக் கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அத்துடன், 3 மாதகாலப் பகுதிநேர ஆங்கிலக் கற்கை நெறிக்கும் (என்.வி.கியூ மட்டம் 2) உடன் விண்ணப்பிக்க முடியும்.
முழுநேரக் கற்கைகள் முற்றுமுழுதாக இலவசமாகவும் பகுதிநேரக் கற்கைகளானவை, குறைந்தளவான கட்டண அடிப்படையிலும் நடத்தப்படவுள்ளன தகுதியுள்ள இளைஞர், யுவதிகள், எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை, “பிரதிப் பணிப்பாளர், மாவட்டக் காரியாலயம், மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையம், பிரதான வீதி, நிந்தவூர்” என்ற முகவரிக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026