2025 மே 05, திங்கட்கிழமை

‘பராமரிப்பற்ற காணி சுவீகரிக்கப்படும்’

Princiya Dixci   / 2021 மே 11 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் சுவீகரிக்கப்பட்டு அரசுடைமையாக்கப்படவுள்ளதாக, நிந்தவூர் சுகாதார வைத்தியதிகாரி திருமதி பரூஸா நக்பர் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால்,   டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்திப்பவர்கள் ஒரு வார காலத்துக்குள் துப்புரவு செய்யுமாறும் அவர் அறிவித்துள்ளார்.

டெங்கு நுளம்பு பரவாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருத்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றாக அழித்தல், வதிவிடத்தில் இனம் பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானதாகுமென சுட்டிக்காட்டினார்.

டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறச் சூழலை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

அத்துடன், வெற்றுக் காணிகளை வைத்திருப்போர் ஒரு வார காலத்துக்குள் காணிகளைத் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அக்காணிகள் அரசுடமையாக்கப்படுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X