Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜூலை 26 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த பாக்கியத்தை P-13 கிராம சேவையாளர் பிரிவு, இன்று (26) காலை 06 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.
விடுவிக்கப்பட்ட கிராம சேவகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டதுடன், பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். போடப்பட்டிருந்த தடைகளும் அகற்றப்பட்டன.
கடந்த 09 திகதி இரவு 08 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, பொத்துவில் கிராம சேவகர் 09ஆம் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவு தொடர்ந்து அவதானத்துக்குரிய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
13 minute ago
19 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
4 hours ago
5 hours ago