எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 04 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பிரத்தியோக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள், பாடசாலைச் சீருடையை அணிந்து செல்ல வேண்டுமென, அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், நேற்று (04) அறிவித்துள்ளது.
தரம் 06ஆம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவிகளின் ஒழுக்க விழுமியங்களைக் கருத்திற் கொண்டு, அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், பிரஸ்தாப தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானம் குறித்து பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கியினூடாக பிரதேச மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பபட்டுள்ளதுடன், இத்தீர்மானத்துக்குப் பெற்றோர் நிறைவான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் மாணவிகள் கல்வி பயிலும் பாடசாலைகளின் சுற்றுப்புறச் சூழலில், மோட்டார் சைக்கிள்களில் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தலைக்கவசமின்றிப் பயணித்து, மாணவியருக்குத் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago