Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேச பாடசாலைகளில் குறிப்பாக பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு, அலைபேசிகளில் புகைப்படம் எடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் மாணவிகள் பல்வேறு அசௌகரீங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் இடைநடுவில் கல்வியை கைவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்துமாறு, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சபையினரும், நலன் விரும்பிகளும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Jul 2025