ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜூலை 08 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள், நாளை முதல் இடம்பெறவுள்ளன.
இதனடிப்படையில், பொத்துவில் பிரதேசத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்தில் நாளை (09) காலை 9.30 மணி இடம்பெறவுள்ளது.
நாளை பிற்பகல் 2.30 மணிக்கு, நிந்தவூர் பிரதேச செயலகத்திலும், நாளை மறுநாள் (10) காலை 9.30 மணிக்கு, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும், நாளைமறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலும், பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026