2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

புதிய எம்.பிகளுக்கு இலவச தபால் வசதி

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட முத்திரை மூலம் இலவச தபால் வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

2020.03.02ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்துச்செய்யப்பட்டிருந்ததோடு, அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரை மூலம் இலவச தபால் வசதியும் இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கடமையின் நிமித்தம் கடிதம் அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரையைப் பாவித்து கடிதம் அனுப்பும் வரப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சகல தபால் அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .