Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் 1999′ பழைய மாணவர் ஒன்றியமான ‘செஸ்டோ’ அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டம், நேற்று நடைபெற்றது.
நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இதன்போது இடம்பெற்றது.
அமைப்பின் புதிய தலைவராக ஏ.எச்.எம்.றிஸான், செயலாளராக எம்.ஏ.எம்.எம்.சிராஜ், பொருளாளராக எஸ்.எச்.எம்.அஸ்மி, பிரதித் தலைவராக என்.எம்.றிஸ்மீர், உப செயலாளராக ஏ.எம்.றியாஸ், கணக்காய்வாளராக எஸ்.எம்.ஆரிஸ் அக்பர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன், எம்.ஆர்.எம்.பர்ஹான், எம்.சி.எம்.சி.றிலா, எம்.பி.எம்.பௌசான் ஆகியோர் ஜனாஸா நலன்புரிக் குழு உறுப்பினர்களாகவும் யூ.எல்.எம்.சப்ரீன், எம்.எம்.அஹ்சின் ஆகியோர் நண்பர்கள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாகவும் ஏ.ஜலீல், எஸ்.ரீ.எம்.சதாத் ஆகியோர் ஊடக இணைப்பாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வருடாந்த பொதுக் கூட்டத்தில், அமைப்பால் நடப்பாண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலை திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அமைப்புக்கான ரீ-சேர்ட் சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago