2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதிய மாணவிகள் அனுமதி

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு 2021/2022 கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்லூரி அதிபர் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், புதிய மாணவிகள் அனுமதிக்கான நேர்முகப் பரீட்சை, எதிர்வரும் நவம்பர் 06ஆம் திகதி சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் நேர்முகப்பரீட்சையில் பங்குபற்ற முடியும்.

இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்துக்கான இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .