Janu / 2024 மே 08 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை ,திருக்கோவில் பிரதேசத்தில் வீடின்றி வாழ்ந்து வந்த மூன்று குடும்பங்களுக்கு காணியுடன் புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தலைமையில் திருக்கோவில் மண்டானை கிராமத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்றுள்ளது .
இப் புதிய வீடுகள் மற்றும் காணி என்பன திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் ஏற்பாட்டில் கனடா சீடர்ஸ் அமைப்பினரின் நிதிப் பங்களிப்புடன் தலா ஒரு வீட்டுக்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியில் இப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.நிருபா கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி கிராம சேவை உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர் .
எஸ்.கார்த்திகேசு

9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025