2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பூரணை தினத்தன்று வெடித்தது அடுப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சமையல் எரிவாயு அடுப்பொன்று, பூரணை தினமான இன்று (16) வெடித்துள்ளது.

பிரதேச செயலக முன்வீதி அக்கரைப்பற்று 8 இல் உள்ள வீடொன்றிலேயே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 

  “சமையலில் ஈடுபட்டிருந்தபோது தீடிரென சத்தமொன்று உருவானதாகவும் இதன் பின்னர் குறித்த அடுப்பின் மேற்புற கண்ணாடி உடைந்து செல்வதையும் அவதானித்தேன் என, சமையலில் ஈடுபட்ட பெண்” தெரிவித்தார்.
 
ஆயினும் இச்சம்பவத்தால் வேறு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X