2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெட்ரோல் கருப்பு சந்தையை இல்லாதொழிப்பது தொடர்பில் ஆராய்வு

Princiya Dixci   / 2022 ஜூலை 20 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

பெட்ரோல் விநியோகத்தில் கருப்பு சந்தை மற்றும் முறைகேடுகளை இல்லாதொழிப்பது சம்பந்தமான கலந்துரையாடல், சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் நேற்று (19) நடைபெற்றது.

இதிலே நடைமுறைச் சாத்தியமான பல முடிவுகள் நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்டதுடன், முடியுமான அளவு கருப்புச் சந்தையை குறைப்பதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் விநியோக செயற்றிட்டம் நடைமுறைக்கு வரும் வரை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி நடைமுறையில் இருக்குமென சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் இதன்போது தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.எம். சம்சுதீன், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், சாய்ந்தமருது லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய நடத்துநர்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்யப்பட்ட செயலியை செயல்படுத்தும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .