2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் விடுதிக்கு சென்றவர் மரணம்

Freelancer   / 2021 டிசெம்பர் 22 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை எஸ்.மகிந்த மாவத்தையில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்து நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த கட்டடத்தில் இருந்த பெண்கள் விடுதிக்குள் பதுங்கிச் சென்ற நிலையில், தவறி விழுந்து உயிரிழந்ததாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் ஏறாவூரைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பு பெண்கள் விடுதி எனவும், அனுமதியின்றி அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்த நபர், பாதுகாவலர் ஓடி வருவதைக் கண்ட நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X