2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொங்கல் பானை, புத்தரிசி வழங்கி வைப்பு

Editorial   / 2022 ஜனவரி 12 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வசதி குறைந்த ஒரு தொகுதி மக்களுக்கு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

கனடாவைச் சேர்ந்த கிருஷேந்திரா பேரின்பமூர்த்தியின் 13ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, தமிழுக்கும் சைவத்துக்கும் அன்னாரது குடும்பத்தினால் இந்த உதவி வழங்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 100 குடும்பங்களுக்கு இந்த அரிசி, பானை பொங்கலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர்களுடைய குடும்பம் சார் உறவுகள் வழங்குகின்றனர்.

இதனை காரைதீவு பிரதேச சபைத் தவிசாளரும், சமூக சேவையாளருமான கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் வழங்கி வருகிறார்.

திருக்கோவில் பிரதேசத்துக்கு உட்பட்ட கஞ்சிகுடியாறு, தம்பிலுவில், விநாயகபுரம் மற்றும் தம்பட்டை பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவை வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X