Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 30 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் இன்று (30) தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மத்தியில் தற்போது துவிச்சக்கரவண்டியின் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது.
பாதை ஓரங்கள், பொது இடங்கள் மற்றும் வியாபார நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் துவிச்சக்கர வண்டிகளை அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பன முறையில் வைக்குமாறு கேட்டுள்ளார்.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் துவிச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் அதிகமான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை துவிச்சக்கரவண்டி காணாமல் போனால் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் திருடனை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
20 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
2 hours ago