2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொத்துவில் உப பஸ் சாலை தரமுயர்வு

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கை போக்குவரத்துச் சபையின் பொத்துவில் உப பஸ் சாலையை, சகல வசதிகளுடனும் தரமுயரத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷரப், இன்று (05) தெரிவித்தார்.

அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிவரும் பொத்துவில் உப பஸ் சாலையை பிரதான சாலையாக தரமுயர்த்தப்பட வேண்டுமென, அமைச்சு சார் ஆலோசனை சபைக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இனங்க, இந்த பஸ் சாலை தரமுயர்த்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு, பஸ் சாலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதனை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.

பஸ் சாலைக்குத் தேவையான புதிய கட்டடங்களை அமைத்துத் தருமாறும், பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள பஸ் தரிப்பு நிலையத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொத்துவில் பஸ் சாலை தொடர்பாக முன்வைத்துள்ள சகல கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக அமைச்சு சார் ஆலோசனை குழுக் கூட்டத்தின் போது, குறித்த அமைச்சுக் குழுவால் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக முஷரப் எம்.பி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .