2025 மே 03, சனிக்கிழமை

போதையில் வந்தவர் தாக்குதல்; இருவர் காயம்

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். இர்சாத்

அக்கரைப்பற்று, அரசயடிச் சந்தியில் நின்று கொண்டிருந்த 40, 55 வயதுடைய இருவர் மீது, மதுபோதையில் வந்த நபரொருவர், நேற்று (17) தாக்குதல் நடத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான இருவரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அக்கரைப்பற்றுப் பொலிஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விடத்தில் இவ்வாறான நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறுகின்றன எனவும், இதற்கான சிறந்த தீர்வை, அக்கரைப்பற்றுப் பொலிஸார் பெற்றுத்தர வேண்டுமெனவும் பொதுமக்கள் கோருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X