Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 26 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி, போதை மாத்திரைகளை தொலைபேசி ஊடாக சூட்சுமமாக விற்பனை செய்த சந்தேக நபரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை - கல்முனை நகரப்பகுதியில் பிரபல பாதணிகள் விற்பனை செய்கின்ற கடையில் பணியாற்றும் நபர், போதைப்பொருள் மாத்திரைகளை விநியோகிப்பதாக கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய, நேற்று (25) மாலை தேடுதல் மேற்கொண்டு குறித்த கடையில் பணியாற்றிய மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபரை கைது செய்ததுடன், சந்தேக நபரது உடமையில் இருந்து 100 போதை மாத்திரைகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைதான சந்தேக நபர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களை தொலைபேசியின் ஊடாக தொடர்புகொண்டு, நீண்ட காலமாக போதை மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
34 minute ago
38 minute ago