2025 மே 01, வியாழக்கிழமை

பூ பறித்துக்கொண்டிருந்த பெண்ணின் சங்கிலி அறுப்பு

Kogilavani   / 2017 மே 16 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

அதிகாலை வேளையில், வீதியோரத்திலிருந்த பூ மரத்தில் பூ பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரின்  கழுத்தில் இருந்த 4 பவுண் தங்கச் சங்கிலியை, மோட்டார் சைக்கியில் பயணித்த இருவர் அறுத்துக்கொண்டுச் சென்ற சம்பவமொன்று, அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில், இன்றுக் காலை இடம்பெற்றுள்ளது.

தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள சித்திவிநாயகர் ஆலயத்துக்கு அருகாமையில்  உள்ள 56 வயதுடைய பெண், சம்பவதினம் அதிகாலை 5.30 மணிக்கு, வழமைபோல பிரதான  வீதியிலுள்ள பூ மரத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் திடீரென வந்த இருவர், அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கிணங்க, திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .